தங்கக் கடனைப் பெறுவது என்பது எளிதானதாகவும், பலருக்கும் விரும்பத்தக்கதாகவும் இருக்கிறது. தங்கக் கடனுக்கு வங்கிகள் மற்றும் NBFC-கள் (வங்கி சாரா நிதி நிறுவனங்கள்) இரண்டுமே சாத்தியமான விருப்பங்களாக உள்ளன. வங்கி அல்லாத நிறுவனங்களில் வட்டி விகிதம் குறைவாக இருக்க வாய்ப்பு அதிகம். மேலும், செயலாக்க கட்டணங்களும் குறைவாகவே இருக்கும். எனவே, உங்களின் தேவைக்கு ஏற்ப சரியான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து கடன் பெறுவது அவசியம்.

தங்கக் கடனின் அளவு, நீங்கள் கொடுக்கும் தங்கத்தின் மதிப்பீட்டைப் பொறுத்தது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தங்க நகைகளின் வடிவமைப்பை கணக்கில் கொள்ளாமல், தங்கத்தின் தூய்மையை மட்டுமே மதிப்பீடு செய்யும். பொதுவாக, 18 காரட் மற்றும் 24 காரட் தங்கத்திற்கே கடன் வழங்கப்படும். மேலும், உங்கள் தங்கத்தின் மதிப்பு மற்றும் LTV (கடன்-மதிப்பு விகிதம்) அடிப்படையில் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

தங்கக் கடனின் வட்டி விகிதம் வங்கி மற்றும் NBFC-களுக்கு மாறுபடும். எனவே, கடன் பெறும் முன்பு வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்யுங்கள். குறைந்த வட்டி விகிதம் மற்றும் சலுகைத் திட்டங்களை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்வது உங்களுக்கு பலனளிக்கும்.

மாதாந்திர தவணை முறையிலோ அல்லது கடன் காலத்தின் போது வட்டியை மட்டும் செலுத்தி அசல் தொகையை முடிவில் செலுத்தும் முறையிலோ நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற திருப்பிச் செலுத்தும் திட்டத்தை தேர்வு செய்வது முக்கியம். தங்கக் கடனை வாங்கும் முன், உங்கள் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பீடு செய்யுங்கள். நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்த முடியாவிட்டால், உங்கள் தங்கம் ஏலம் விடப்படும் அபாயம் இருக்கிறது. இதைத் தவிர்க்க சரியான திட்டமிடல் அவசியம்.