தங்கையை கவனித்து வந்த அண்ணன்…. வீட்டில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பெரியார் நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கீதா அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சிவகுமார் திடீரென உயிரிழந்துவிட்டார். இதனால் கீதாவை அவரது அண்ணன் குணசீலன் என்பவர் திருச்சியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து வந்து பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கீதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *