முன்னாள் கால்பந்து வீரரும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான துளசிதாஸ் பல்ராம் உடல்நலக்குறைவால் காலமானார். 1951 – 1962 காலகட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடிய இவர் 1962ல் நடந்த ஆசிய கோப்பையில் தங்கம் வென்றார். 1956ல் மெல்போர்ன், 1960ல் ரோம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல உறுப்புகள் செயலிழந்து இவர் காலமான நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.