தங்கம் விலை தொடர் அதிகரிப்பு…! ஒரு சவரன் ரூ.38,840 க்கு விற்பனை… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!!!

கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றும் ஆபரண தங்கம் விலை அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,855 விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை 8 ரூபாய் அதிகரித்து 38,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 68.90 காசுக்கு விற்பனையாகிறது.