தங்கம் விலை திடீர் உயர்வு…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?…. இன்றைய விலை நிலவரம் இதோ…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. அந்த வரிசையில் தங்கத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.38,528- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,816- க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.