தகர கொட்டகை அமைக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இங்கு புதிதாக பால் குளிரூட்டும் நிலையம் அமைப்பதற்காக மேலே தகர கொட்டகை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு தகர குட்டகையின் மேலே இருந்து கீழே இறங்க முயற்சி செய்தபோது தொழிலாளியான ஹரிஹரன் என்பவர் எதிர்பாராதவிதமாக மின்விளக்கின் இரும்பு கம்பியை பிடித்துள்ளார்.

அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஹரிஹரனை சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு ஹரிஹரனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *