ட்விட்டரில் இருந்து X என்று பெயர் மாற்றப்பட்டுள்ள நிறுவனம் புதிய திட்டமாக போலி கணக்குகளை நீக்குவதற்கு Not a Bot என்ற டெஸ்டிங் திட்டத்தில் தற்போது இறங்கியுள்ளது. அதாவது புதிதாக கணக்கு தொடங்குபவர்களுக்கு X தளத்தின் பதிவுகளை பார்க்கவும் ஃபாலோ பண்ணவும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் போஸ்ட்களை பதிவிடவும் கமெண்ட் செய்ய வேண்டும் என்றால் ஆண்டுதோறும் அல்லது மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.