டோக்கன் இல்லையா அப்போ வராதீங்க… மக்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிக்கெட் இல்லாத பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், இலவச தரிசன டோக்கன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் சொர்க்கவாசல் நாளை திறக்க உள்ள நிலையில், டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளை முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை சுவாமியை தரிசிக்க டிக்கெட் 300 ரூபாய் என இரண்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. கோவிலின் சிறப்பு தரிசனம் கூடாது என்று போராடி வரும் நிலையில் இலவச தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.