டேய் எப்புட்றா… வெறித்தனம் காட்டும் வேலூரை சேர்ந்த மாணவர்.. சொன்னா நம்பமாட்டீங்க!

வேலூர் அருகே ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் ஸ்கேட்டிங் செய்து கொண்டு ஒரு கையில் தேசிய கொடி ஏந்திக் கொண்டு மற்றொரு கையில் சிலம்பம் சுத்தி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குடியாத்தம் பகுதியை சேர்ந்த நிதின் என்பவர் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்கேட்டிங் செய்து கொண்டு ஒரு கையில் தேசிய கொடியும் மற்றொரு கையில் சிலம்பம் சுத்தியும் வருகிறார். சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு ஸ்கேட்டிங் செய்து கொண்டு பள்ளி மாணவர் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் பிரைவேட் லிமிடெட் அங்கீகரிக்க டெல்லியில் இருந்து தலைமை அலுவலகத்தில் இருந்து வந்துள்ளனர்.