டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலும் துணை முதல்வராக மணிஷ் சிசோடியாவும் இருக்கிறார்கள். இந்நிலையில் மணீஷ் சிசோடியா அலுவலகத்தில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினார்கள். இது தொடர்பாக மணிஷ் சிசோடியா தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சிபிஐ சோதனை வரவேற்கத்தக்கது.
ஆனால் அங்கு எதுவும் கிடைக்கப் போவது கிடையாது என்று பதிவிட்டுள்ளார். மேலும் மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.