டெல்லி தீ விபத்து – ராஜ்நாத்சிங் இரங்கல் …!!

டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு  ஏற்பட்ட பயங்கர தீ  43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Image

இந்த சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க்  தனது ட்வீட்_டர் பக்கத்தில் , டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததால் ஆழ்ந்த வேதனை அடைகின்றேன் , காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *