இந்தியா முழுவதும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதன் பிறகு டெல்லியில் குடியரசு தின விழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெறும். இந்நிலையில் டெல்லியில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி பங்கேற்கிறார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு ராஜபாதையில் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் போது 50 போர் விமானங்கள் வீர சாகசங்களில் ஈடுபடும். இந்த குடியரசு தின விழாவில் முதல் முறையாக கடற்படையின் ஐஎல்-38 விமானம் கலந்து கொள்கிறது. மேலும் இந்த விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு 32,000 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.