டெல்லி அரசின் இலவச சுற்றுலா திட்டம்…. தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி தேவாலயம் சேர்ப்பு…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு….!!

டெல்லி அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இலவச ஆன்மீக சுற்றுலாவில் தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயம் சேர்க்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு இலவச ஆன்மீக சுற்றுலா என்னும் திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின்படி 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா செல்ல டெல்லி அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கும். இதன்படி பயனாளிகள் பூரி, ராமேஸ்வரம், ஹரித்வார், சீரடி,திருப்பதி உள்ளிட்ட 13 ஆன்மீக தலங்களுக்கு இலவசமாக சென்று வரலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வருகிற 3ம் தேதி இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதற்காக 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மொத்தம் ஆயிரம் பேருடன் அயோத்தியிலிருந்து முதல் ரயில் புறப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான இந்த சுற்றுலா திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணி தேவாலமும் சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *