டெல்லில மட்டும் இல்ல இங்கயும் கிங் தான் – ஹெச்.ராஜா

டெல்லியில் மட்டுமல்ல தமிழகத்திலும் பாஜக ராஜா தான் என கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், “தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வருடத்திற்கு பத்து லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பெறும் கோயில்களில் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்தாக வேண்டும். கோவிலுக்கு வரும் காணிக்கைகள் திருடப்படுகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் தான் தெரிவிக்கின்றேன்.

அறநிலையத் துறையினரால் கோடிக்கணக்கில் கோயிலிலிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது. அறநிலையத்துறை கோயில்களை அடியோடு அழிக்கும் துறையாக செயல்பட்டு வருகின்றது. இந்து மக்களை இந்து அறநிலையத்துறை சோதனை செய்கின்றது” என கூறியுள்ளார். அதோடு “மத்திய பாஜக அரசின் மேலுள்ள குற்றச்சாட்டு இடிந்த திராவிடத்தின் அழுகிப்போன மூளையின் பேச்சு போன்றதே.

காதலில் தற்கொலைகள் அதிகமாக நடைபெறுவதால் காதலுக்கு தடை போட முடியுமா? ரஜினி ஆளுமைமிக்க நபர் என்பதால் பாஜகவில் அவர் இணைவது குறித்து எந்த கருத்தையும் என்னால் கூற முடியாது. பாஜக கூட்டணியிலே அதிமுக இருக்கின்றது. டெல்லியில் மட்டுமல்ல தமிழகத்திற்கும் பாஜக ராஜாதான்” என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *