சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் பிரபல தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி முதல்வர் எழும்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் எங்கள் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் அலுவலர்கள் என 50 பேரை வட மாநிலங்களுக்கு 7 நாட்கள் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவெடுத்தோம். கடந்த 2023 ஆம் தேதி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் பாலாஜி என்பவரை அணுகி பேசினோம். அவர் சுற்றுலா செல்ல 19 லட்சம் செலவாகும் என தெரிவித்தார். மூன்று தவணைகளாக 18.76 லட்சம் பணத்தை பாலாஜியிடம் கொடுத்தோம்.

ஆனால் கூறியபடி அவர் ஏப்ரல் மாதம் சுற்றுலா அழைத்து செல்லாமல் ஏமாற்றிவிட்டார். நாங்கள் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து அந்த பணத்தை பெற்று தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆழ்வார்பேட்டையை சேர்ந்த பாலாஜி என்பவர் தனது டிராவல்ஸ் நிறுவனத்தை 2020 ஆம் ஆண்டு மூடியது தெரியவந்தது. தனது நிறுவனம் செயல்படுவது போல தனியார் பள்ளி முதல்வரிடம் அவர் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார். அவரை நேற்று முன்தினம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.