நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. பாமகவிற்கு 7 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக சம்மதித்து உள்ளதாம். ஆனால் அதேசமயம் பாமக தரப்பில் ஒரு ராஜய்சபா சீட்டும் கேட்கப்பட்டுள்ளதாம். இந்த டீல் முடிந்தால் கூட்டணி உறுதியாகிவிடும் என கூறப்படுகிறது.

மேலும், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி வெற்றிபெற்றால் அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்றும் பாமக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.