டீம் வலுவா இருக்கு… இதுவே கடைசி… கோலிக்கு கோப்பையை கொடுங்க… அறிவுரை சொல்லும் ரெய்னா!!

இந்திய அணி வீரர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு விராட் கோலிக்கு  கோப்பையை பெற்று தரவேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்..

16அணிகள் பங்கேற்கும் 7ஆவது T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் ஓமனில் 6 போட்டிகள் மட்டுமே நடக்கிறது.. மற்ற போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், சார்ஜா அபுதாபி ஆகிய 3 நகரங்களில் நடைபெற உள்ளது.. ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்திருக்கும்  அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் இடம்பிடித்துள்ள நிலையில், மற்ற 8 அணிகளுக்கு மட்டும் இன்று முதல் லீக் சுற்று ஆட்டங்கள் நடக்கிறது.

லீக் சுற்றில் ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளில் 8 அணிகள் இருக்கின்றன.. இதில் 2 பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் குரூப் 12 சுற்றில் இடம்பெறும்.. இந்திய அணி நாளை இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.. பின்னர் 20ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.. அதனைத் தொடர்ந்து சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானை 24 ஆம் தேதி எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.. அவர் கூறியதாவது, இந்த உலககோப்பை விராட் கோலி கேப்டனாக விளையாடும் கடைசி டி20 தொடராகும்.. ஆகவே இந்திய அணி வீரர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு விராட் கோலிக்கு  வெற்றியை (கோப்பையை) பெற்று தரவேண்டும்.. தற்போது இந்திய அணி மிகவும் வலுவான நிலையில், தான் இருக்கிறது.. பேட்டிங் – பவுலிங் என்று இரண்டிலும் கலவையுடன் இருக்கும் இந்திய அணி எந்த அணியையும் வெல்ல முடியும்.. இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல போட்டிகளில் ஆடி இருப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

சமீபத்தில் விராட் கோலி இந்த டி20 உலக கோப்பை தொடருடன் தான் டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *