டீக்கடையில் வடையில் எலி!
கரூரில் உள்ள ஒரு பிரபல டீக்கடையில் வாங்கி சாப்பிட்ட வடையில் எலி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர், வடையில் எலி இருப்பதை கண்டதும் கடைக்காரரிடம் இதைப் பற்றி தெரிவித்து, அந்த வடையை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், கடைக்காரர் சின்ன எலி தான் ஒன்றும் ஆகாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்து விட்டு உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், நகராட்சி நிர்வாகம் உணவகத்தை மூடி, சுகாதார பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.