டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும்… ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மலிங்கா…!!!

இலங்கை அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர் மலிங்கா சர்வதேச போட்டியில் இருந்தும், டி20 போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் மலிங்கா. இவரின் துல்லியமான பந்துகள் எதிரே நிற்கும் பேட்ஸ்மேனை கலங்கவைக்கும். குறிப்பாக எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதற்கு, இவர் வீசும் பந்துகள் அணியின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். 30 டெஸ்டுகள், 226 ஒருநாள் போட்டி மற்றும் 84 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

கடைசியாக 2020 மார்ச்சில் இலங்கை அணிக்காக விளையாடி இருந்தார். மேலும் 2007 உலகக் கோப்பையில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்தவர். சர்வதேச டி20 போட்டியில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பாவலர் என்ற பெருமை இவரை மட்டுமே சாரும். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *