“டி20 உலகக் கோப்பை” பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா…. கொண்டாடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு….!!

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்றதைக் கொண்டாடிய காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தற்போது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தன. இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால் பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இவ்வாறு இருக்கையில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் சிலர் கல்லூரி விடுதியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததை கொண்டாடியுள்ளனர்.

மேலும் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து இந்தியா தோல்வியடைந்ததை கொண்டாடியாதற்காக காஷ்மீர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஷார்- இ காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *