ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற ஜூன் மாதம் ஆரம்பிக்கும் நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை முடிவடைந்த பிறகு அடுத்து நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என்று தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா தன்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தாத காரணத்தால் அவரை இந்திய அணியில் சேர்க்கும் திட்டம் ரோகித் மற்றும் அஜித் அகர்கருக்கு இல்லையாம். இருப்பினும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவும் டி20 போட்டியில் சமீபத்திய ஃபார்ம் காரணமாகவும் டி20 உலகக்கோப்பை முடிவடைந்த பிறகு அவர் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வழியாகவில்லை. மேலும் ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.