ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று ஆஸ்திரேலியா அணியுடன் மோத இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விடும். அதே நேரம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றாலும் 3 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். இந்நிலையில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஒருவேளை மழையினால் போட்டி நின்றால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். இதன்மூலம் ஏற்கனவே 4 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும். இதேபோன்று ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் போதும் போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் ஆஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகிவிடும். மேலும் இன்று என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.