டி20 உலக கோப்பை : இளம் வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை அணி …! வெளியான வீரர்களின் பட்டியல் ….!!!

டி20 உலக கோப்பை போட்டிக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது .

டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி முதல் தொடங்குகிறது .இத்தொடருக்கான ஒவ்வொரு அணியும் தங்கள் நாட்டு  வீரர்களின் பட்டியலை  அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் இலங்கை அணியின் கேப்டனாக தசுன் சனகா தலைமையிலான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி : தசுன் ஷனகா(கேப்டன்), தனஞ்சயா டி சில்வா(துணைக் கேப்டன்), அவிஷ்கா ஃபெர்னான்டோ, சாரித் அசலங்கா, பனுகா ராஜபக்ச, கமிந்து மென்டிஸ், குஷால் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, லஹிரு மதுசங்கா, துஷ்மந்தா சமீரா, நுவான் பிரதீப், மகேஷ் தீக்சனா, பிரவீன் ஜெயவிக்ரமா.

ரிசர்வ் வீரர்கள் : லஹிரு குமாரா, புலினா தாரங்கா, பினுரா ஃபெர்னான்டோ, அகிலா தனஞ்சயா