தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி பதினோராம் தேதிக்குள் இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அறிக்கை எண்: 022023
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்.
பணி: சாலை ஆய்வாளர்.
காலியிடங்கள்: 761.
சம்பளம் மாதம்:ரூ.19,500- 71,900.
வயதுவரம்பு: ஆ.தி, ஆ.தி, பழங்குடியினர் மிபிவ, சீம,பி.வ,பி.வ(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் உச்ச வயது வரம்பு இல்லை. மற்றவர்கள் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஐ.டி.ஐ சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: தாள் -1 பாடத்தால் 7.5.2023 அன்று காலை 9:30 முதல் பிற்பகல் 12 30 மணி வரையும், தாள்-2 அன்றைய நாள் பிற்பகலில் இரண்டு மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.
கட்டணம்: நிரந்தர பதிவு கட்டணம் ரூ.150 தேர்வு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். மேலும் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். கட்டண சலுகைகள் குறித்த விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் இட ஒதுக்கீடு விதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:www.tnpscexams.in/www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி; 11.2.2023