டி.ஆர்.பாலுவின் சகோதரி மரணம்..!!!

திமுக பொருளாதாரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர் பாலுவின் மூத்த சகோதரி பவுனம்மாள் காலமானார். சொந்த ஊரான மன்னார்குடியில் தங்கி இருந்த அவர் வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். இதன் காரணமாக டி.ஆர்.பாலு அவருடைய மகனும் எம்.எல்.ஏ-வும் ஆன டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் மன்னார்குடி விரைந்தனர். திமுக தொண்டர்கள் அவருடைய வீட்டில் கூடியுள்ளனர்.