விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் புவன்சங்கர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காலை 8 மணிக்கு டியூஷன் சென்று விட்டு வீட்டிற்கு வந்த புவனசங்கரிடம் முருகேசன் பள்ளிக்கு செல்லுமாறு கூறிவிட்டு வேலைக்கு புறப்பட்டார். இதனையடுத்து மதிய உணவு சாப்பிடுவதற்காக முருகேசன் வீட்டிற்கு வந்தபோது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதனால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த முருகேசன் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புவன் சங்கரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் புவன் சங்கர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.