டிச.,8 அன்று உருவாகும் புதிய புயலுக்கு…. என்ன பெயர் தெரியுமா….? இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் டிசம்பர் 8 ஆம் தேதி உருவாக போகும் புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ’மாண்டஸ்’ என்னும் பெயரை பரிந்துரை செய்துள்ளது. அதனால் இந்த புயல் ’மாண்டஸ்’ என அழைக்கப்படும்.