டிசம்பர் 20 முதல்…. இந்த அருவிகளில் குளிக்க அனுமதி…. செம சூப்பர் அறிவிப்பு…!!!

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் பொது மக்களுக்கு தொற்று பரவாமல் இருப்பதற்காக அவர்கள் பொதுவெளியில் நடமாட தடை விதித்து ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. ஊரடங்கு காலங்களில் போக்குவரத்து, பொது இடங்களுக்குச் செல்ல தடை போன்ற கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பருவ மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், தொற்று அபாயம் குறைந்துள்ளதால் குற்றால அருவிகளில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *