டிசம்பருக்குள் BSNL 5G சேவை…. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்…..!!

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான bsnl நாட்டில் உள்ள 200 தளங்களில் 4Gநெட்வொர்க்கை அமைக்க தொடங்கியுள்ளது என்றும் இரண்டு வாரங்களில் அது செயல்பட தொடங்கும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி அறிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிஎஸ்என்எல் நெட்வொர்க் 5G ஆக மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஐடிஐ லிமிடெட் நிறுவனங்களுக்கு 4Gநெட்வொர்க்கை பயன்படுத்துவதற்காக 19000 கோடி மதிப்பிலான முன்கூட்டிய கொள்முதல் ஆர்டரை வாங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.