டிஎன்பிஎஸ்சி குரூப்-4, VAO தேர்வர்களே…. ஈஸியா வெற்றி பெறணுமா?…. இதோ எளிய முறை…..!!!!!

தமிழ்நாடு அரசின் இள நிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித்தண்டலர், நில அளவர் மற்றும் வரைவாளர் ஆகிய 7 வகையான பணி இடங்களுக்கு தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு வாயிலாக பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கிடையில் அரசு தேர்வுகளில் மிகவும் குறைந்த அளவிலான 10ஆம் வகுப்பு கல்வித்தகுதியை மட்டும் அடிப்படையாக வைத்து நடத்தப்படும் இத்தேர்விற்கு அதிக அளவிலான தேர்வர்கள் விண்ணப்பிப்பது வழக்கம் ஆகும். இப்போது நடப்பு ஆண்டில் 7,382 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும் இப்பணியிடங்களுக்கு மொத்தம் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்து இருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக போட்டி அதிகரித்து இருக்கிறது. ஆகவே தேர்வர்கள் மிகவும் அதிகளவிலான மதிப்பெண்களை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. மொழிப் பாடத்தில் 100 மற்றும் பொதுஅறிவு பாடத்தில் 100 என மொத்தம் 200 வினாக்களுக்கு 1.5 மதிப்பெண் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இவற்றில் 180 கேள்விகளுக்கு தேர்வர்கள் சரியான பதிலை அளிக்கவேண்டும் என நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். தமிழ்மொழிப் பாடப்பிரிவில் தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் போன்ற தலைப்புகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இவை மிகவும் எளிமையான முறையில் அதிகமான மதிப்பெண்களை பெற்றுத்தரும் பகுதி ஆகும். அத்துடன் தமிழ் மொழித்தாள் தகுதித்தாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 6 -10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழியின் அனைத்து பகுதிகளையும் முழுமையாக படித்தாலே 90 முதல் 95 மதிப்பெண்களை பெற்றுவிடலாம். இதேபோன்று பொதுஅறிவு பகுதியில் புவியியல், வரலாறு மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கும் 6-10ம் வகுப்பு பாட புத்தகத்தை முழுமையாக படித்துக்கொள்ள வேண்டும். இதைதவிரத்து நேரம் இருப்பின் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாட புத்தகத்தை படித்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி நடப்பு நிகழ்வுகளை நன்கு அறிந்து வைத்து இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *