டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு….. இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்….!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. குரூப்-4 தேர்வுக்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மொத்தம் 7 ஆயிரத்து 382 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இதில் 80 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும். தற்போது வரை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால், தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *