டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்… துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்… பெரும் பரபரப்பு…!!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே குந்தலாடி என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இன்று அதிகாலை இரண்டு பேர் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அப்போது போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது கொள்ளையர்கள் கத்தியை கொண்டு போலீசாரை தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கொள்ளையர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு  நடத்தியுள்ளனர். இதில் கொள்ளையன் மணி என்பவருக்கு தொண்டையில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தப்பி சென்ற  மற்றொரு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தற்போது பதற்றம் நிலவுகிறது. மேலும் பாதுகாப்பிற்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply