ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் விஞ்சமுரு மாதவ் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய பெற்றோரின் பேச்சைக் கேட்டு மனைவி தன்னை துன்புறுத்தியதாக செல்ஃபி வீடியோ எடுத்து வைத்து விட்டேன் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.