சேலத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவர் பேசியதாவது, 2024 தேர்தல் ஒரு செமி பைனல் தான். 2026 ஆம் ஆண்டு தேர்தல் தான் உண்மையான பைனல். இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். திமுக கூட்டணி 200 இடங்களை தாண்டி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நம் குறிக்கோள். திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
அதன் பிறகு அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் போதும் சரி தற்போது எதிர் கட்சியாக இருக்கும் போதும் சரி பேரிடர் காலங்களில் களத்தில் இல்லை. ஆனால் எப்போதுமே மக்களுக்காக களத்தில் உள்ள கட்சி திமுக மட்டும் தான் என்று கூறினார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் நேரடியாக திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார். மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத மக்களுக்கு அடிப்படை உரிமையான சமூக நீதிப் பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டும் நம்பி இறுமாப்புடன் இருக்கும் 200 வெல்வோம் என்று கூறும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். 2026 தேர்தலில் உங்கள் (திமுக) கூட்டணியை மக்களை மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என எச்சரித்துள்ளார்.