டாப் 10 கோடீஸ்வரர்கள்…. முதலிடத்தை பிடித்தவர் யார் தெரியுமா….? இதோ முழு லிஸ்ட்….!!

உலகின் டாப் 10 இடத்தைப் பிடித்த கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகில் முதல் 10 இடத்தை பிடித்துள்ள கோடிஸ்வரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு முதலிடத்தில் 177 பில்லியன் அமெரிக்க டாலரை வைத்துள்ள அமேசான் நிறுவர் ஜெப்பெசாஸ் உள்ளார். அவரை தொடர்ந்து 2வது இடத்தில் 151 பில்லியன் டாலர் வைத்துள்ள டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரி எலான்மஸ்க் உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்களின் பட்டியலில் எலான்மஸ்க் 31வது இடத்தில் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து LVMH தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னாலட் 150 பில்லியன் டாலர் வைத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

அவரை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ் நான்காவது இடத்தயும், பேஸ்புக் நிறுவர்மார்க் ஜூக்கர்பெர்க் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து ஆறாவது இடத்தை வாரன் பஃபெட், ஏழாவது இடத்தை லாரி எலிசன், 8வது இடத்தை லாரி பேஜ், ஒன்பதாவது இடத்தை சர்ஜிப்ரின், பத்தாவது இடத்தை முகேஷ் அம்பானியும் பிடித்துள்ளனர்.