மத்திய பிரதேசம் மாநிலத்தில் மூன்று முஸ்லிம் சிறுவர்களை ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு வாலிபர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ஒரு வாலிபர் மூன்று முஸ்லிம் சிறுவர்களை ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு வற்புறுத்தியுள்ளார்.

மேலும் அந்த சிறுவர்களை செருப்பால் அடித்து துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.