ஜெய்பீம் சர்சை தேவையற்றது…! தூக்கி வீசிட்டு போயிறணும்…. சீமான் நச்சு பதிலடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், ஜெய்பீம் படத்தில் மதம் எல்லாம் கிடையாது, ஜெய்பீம் என்பது ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள், இருளர், குறவர்கள், ஆதிகுடி மக்கள் இவர்களை போன்று காடுகளில் வாழுகின்ற பழங்குடி மக்கள் நம்ம மக்கள். அவர்களுடைய வலி அது வந்து சாதிய மோதல் கிடையாது, ஒரு சாதி இன்னொரு சாதி ஓடுக்குகிறது என்று கிடையாது, அதிகாரம் ஒடுக்குகிறது என்பதுதான் அந்த படம் சொல்கிறது.

அதிகாரம் ஒடுக்குகிறது, காவலர்கள் வந்து நீங்கள் வெளியில் வரும்போது சொல்றீங்க, தனியா நில்லு நீ என்ன சாதி அப்படி என்று….. இதுவரை முடிக்கப்படாத வழக்குகள் எல்லாம் இருக்கு இவர்கள் மீது போடு என்றால் யார் ஒடுக்குவது ? அதிகாரம், அப்போஅந்த அதிகாரத்திற்கும், ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கும் இடையே போர் அது தான் நடக்கிறது.

அதைத்தான் எடுத்துருகிறார் ஞானவேல் அவர்கள், சூர்யா அவர்கள். இதில் என்னவென்றால் படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு அழைத்து சொன்னார், படம் மிகவும் அருமையாக வந்து கொண்டிருக்கிறது, சந்துரு அவர்கள் எடுத்த வழக்கு அதை அடிப்படையா வச்சு எடுக்கிறோம், அதை தேவையில்லாமல் இவர்கள் வந்து அதை ஒரு பெரிய விஷயமாக ஆக்கி விட்டார்கள், இரண்டாவது முதல் முதலில் ஜெயபாஸ்கர் அவர்கள்தான் வன்னியர் குறியீடு இருப்பதை சொல்கிறார், அதன் பிறகு கவுதமன் அவர்கள் சொன்னதும் இவர்கள் டக்குனு  எடுத்துட்டாங்க. அதை அதோடு அது முடிந்து விட்டது, முற்றுப்பெற்று விட்டது.

அதற்கு பிறகு அது தேவை இல்லாமல் இப்போ பாருங்க ஒரு மாசம் ஆகியும் அதே கேள்வியை எழுப்புகிறார்கள். நான் அதற்கு ஒரு முற்று வைக்கணும் என்று தான் நினைக்கிறேன், அதை விட்டுடுங்க. அதைவிட பல நூறு பிரச்சனைகள் இருக்கிறது, கேல் எரிவாயு இருக்கிறது, மேல மின் கோபுரம் இருக்கிறது, அத்திக்கடவு அவினாசி திட்டம் அப்படியே இருக்கிறது, அன்னூரில் 3,800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது, அப்படி பல பிரச்சினைகள் இருக்கிறது.

நீட்டில் மரணம் இருக்கிறது, பாலியல் ரீதியாக மரணம் இருக்கிறது, இவ்வளவு கொடுமை எல்லாம் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். உங்க ஊரில் கொஞ்சம் தண்ணீர் குறைவாக இருக்கிறது, எங்க ஊரில் நீந்திக் கொண்டு இருக்கிறோம் சென்னையில், அதெல்லாம் இருக்கு. அரசியலுக்கும், கலைத்துறையினருக்கு மோதல் இல்லை. இப்ப எத்தனை படங்கள் வந்துள்ளது, எல்லாம் மோதி கொண்டா இருந்தார்கள் ? சொல்றாங்க சின்ன வலி என்று, என்னோட தனிப்பட்ட கருத்து, ஒரு குடி தமிழ் குடியினுடைய வலியை சொல்ல போய், இன்னொரு தமிழ் குடிக்கு வலியை ஏற்படுத்தாமல் இருப்பது பொறுப்பு, அந்த பொறுப்பு நடிகர் சூர்யாவுக்கு இருக்கு, அவர் குடும்பத்திற்கு இருக்கு.

அதை நான் உணர்ந்திருக்கிறேன். அவருக்கு தெரியாமல் நடந்துச்சு, இருந்தா இந்த மாதிரி அப்பவே தவிர்த்து இருப்பார். ஜெய்பீம்  ஓடுயது இதனால் இல்லை, அந்த படம் மிகத் தரமாக எடுக்கப்பட்டிருக்கிறது, மிகத் தரமாக சொல்லப்பட்டு இருக்கிறது அதனால் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அதற்கு இது  அவசியமற்றது, தேவையற்றது தூக்கி வீசிட்டு நாம் போய்கொண்டு இருக்கலாம், நடந்துருச்சு அதே பேசிட்டு இருக்க வேண்டியது இல்லை என சீமான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *