ஜெயலலிதா மரண அறிக்கை சுகாதாரத்துறை ஆய்வில் உள்ளது… உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…!!!!!

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம் அளித்த விசாரணை அறிக்கை தமிழக சுகாதார துறையின் ஆய்வில் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவரின் கவன குறைவு தொடர்பாக ஆய்வு செய்து சுகாதாரத்துறை முடிவெடுக்கும் என தமிழக அரசு கூறியுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிட கோரிய வழக்கு நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.