தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. இந்நிலையில் வழக்கறிஞர் தமிழ்மணி ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நீதிபதி ஆறுமுக சாமியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது, நான் அறிக்கை சமர்ப்பித்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், முன்னாள் முதல்வர் மற்றும் ஒரு கட்சியின் தலைவர் என்பதால் தான் இது போன்ற கேள்விகள் எழுகிறது.

என்னுடைய அறிக்கையில் அனைத்தையும் தெளிவுபடுத்த வழங்கியதால் தான் எவ்வித சர்ச்சையும் எழவில்லை. அதன் பிறகு அறிக்கை குறித்த சந்தேகங்களுக்கு ஏற்கனவே நான் பதில் அளித்துவிட்டேன். என்னுடைய அறிக்கையில் மருத்துவர்கள் சாட்சியம் அளித்ததை தான் எழுதியுள்ளேன். சொல்லப்போனால் நான் சொந்தமாகவோ அல்லது அதிகமாகவோ எதையுமே அறிக்கையில் எழுதவில்லை. அதன் பிறகு ஜெயலலிதாவை சிபிஆர் செய்தது மருத்துவரோ நர்சோ கிடையாது. அறுவை சிகிச்சை அறையில் பணியாற்றும் ஊழியர்கள் தான் சிபிஆர் செய்தது. எம்பார்மிங் செய்ய கடிதம் கொடுத்தது இன்னொருவர். அந்த நபர் யார் என்பதை நான் சொல்ல முடியாது. மேலும் எய்ம்ஸ் மருத்துவ ஆணையத்தை தவிர வேறு யாருக்கும் தனியாக கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.