ஜெயக்குமாரை நிதி அமைச்சராக்குனது யாரு? – டிடிவி சொன்ன அட்டகாசமான பதில் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுக எனக்குதான் என்று ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா மூன்று பேரும்  சொல்கிறார்கள். சசிகலா நீதிமன்றம் மூலம் போட்டியிடுகிறார். இவர்கள் இரண்டுபேரும் கட்சிக்குள்ளே பதவி சண்டை போடுகிறார்கள். நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கின்ற இயக்கம் ஐந்து வருடங்களாக நடத்தி கொண்டிருக்கிறோம், நாங்கள் அம்மாவினுடைய ஆட்சியை கொண்டு வருவோம், அம்மாவுடைய கட்சியை மீட்டு எடுப்போம் தான் சொல்கிறேன். அதனால் நாங்கள் அந்த பதவி சண்டையில்  போகவில்லை.

ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று தான், நாங்கள் அந்த இயக்கத்தை மீட்டெடுப்போம். மறுபடியும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தான் அந்த இயக்கத்தை மீட்டெடுக்க முடியும் என்பது  எங்களுடைய நம்பிக்கை. இதைவிட்டுட்டு, இன்னொரு வீடு பத்தி எறியும் போது நெருப்பு வைக்கின்ற வகையை சேர்ந்தவர்கள் நாங்கள் அல்ல.நான் அன்றைக்கே சொன்னேன்…  நாங்கள் அம்மாவினுடைய தொண்டர்கள். அந்த சிங்கத்தினுடைய சிங்க குட்டிகள், நாங்கள். நரி கூட்டத்தில் சேர விரும்ப மாட்டோம்.

ஜெயகுமார் எனக்கு விரோதியா? அவரை நிதி அமைச்சராக யார் ஆக்கினார்கள் என்று கேளுங்கள். அதாவது நம்ம ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். திருடன் பிறரை நம்ப மாட்டான் என்று… அதுபோன்று யாரு துரோகி ? யாரெல்லாம் துரோகிகள் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும், அதனால் அவர்களை பார்த்து மக்கள் சிரிக்க தான் செய்வார்கள்.

இன்னொரு கட்சி பிரச்சினையில் நான் தலையிட மாட்டேன். திரும்பத் திரும்ப சொல்கிறேன். ஜனநாயக முறையில் தான் நாங்கள் போராடி வெற்றி பெறுவோம். அதற்குள் உண்மையான தொண்டர்கள் அம்மாவுடைய தொண்டர்கள், தலைவருடைய தொண்டர்கள் மிச்சம் மீதி இருந்தால் அங்கு தொண்டர்கள் இருந்தால்… இதை  சகித்துக் கொண்டிருக்காமல் எங்களிடம் வாருங்கள்..

இது அம்மாவுடைய இயக்கம் என்று தான் சொல்ல முடியுமே தவிர, அந்த கட்சி நிலமை பார்த்து நான் சொன்னேன் எனக்கு வருத்தமாக தான் இருக்கு. பதவி சண்டையில் அவர்கள் இரண்டு பேரும் சண்டை போடுகிறார்கள். இதை நாங்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, திமுக தான் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *