ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள்… முதல்வர் பழனிசாமி வாழ்த்து…!!!

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இன்று பிறந்தநாள் காணும் மகிழ்ச்சிகரமான இந்த நன்னாளில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் நீண்ட நாள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்ந்து ஆந்திர மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.