கர்நாடகாவில் ஜூலை 1ஆம் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உட்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சரவை கூட்டத்துக்கு பின் பேசிய அவர், ஜூலை 1 முதல் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் இலவசமாக 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்கள் சென்றடையும் எனவும் கூறினார்.