ஜூலை 1 முதல் அமல்…. ரயில்வேயில் அதிரடி மாற்றம்…. பயணிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ரயில்வேயில் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50% தொகை திருப்பித் தரப்படும். தட்கல் டிக்கெட்டுகளை இனி காலை 10 மணி முதல் 11 மணி வரை ஏசி கோச் பயணிகளும், காலை 11 மணி முதல் 12 மணி வரை ஸ்லீப்பர் கோச் பயணிகளும் முன்பதிவு செய்யலாம். பிரீமியம் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் சுவிதா ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொலைதூர ரயில்களில் பயணிகளின் உணவு முறையை மேம்படுத்த போபால் ரயில்வே பிரிவு சிறப்பு பிரச்சாரத்தை நடத்த உள்ளது. இந்த பிரச்சாரம் ஜூலை மாதம் முதல் தொடங்கும். இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி ரயில்களின் ஸ்லீப்பர் பெட்டிகளில் ரயில்வே அதிகாரிகள் பயணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.