ஜூடோ போட்டியில் பங்கேற்ற மாணவி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி மேற்கு தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்க பாண்டியம்மாள்(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சிவகாசியில் இருக்கும் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜூடோ விளையாட்டு வீராங்கனையான தங்கபாண்டியம்மாள் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் திருப்பூரில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தங்க பாண்டியம்மாள் தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *