“ஜிவி 2 திரைப்படத்தின் டீசரை வெளியிடும் பிரபல இயக்குனர்”…. வெளியான தகவல்…!!!!

ஜிவி 2 திரைப்படத்தின் டீசரை பிரபல இயக்குனர் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து மக்களிடையே பிரபலமாகி வருகிறார் நடிகர் வெற்றி. இவர் நடித்த ஜீவி திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் ஜீவி2 என உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை விஜே கோபிநாத் இயக்க அஸ்வினி சந்திரசேகர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் கருணாகரன், மை கோபி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சுந்தரமூர்த்தி இசையமைக்க படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கின்றார்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்து இருப்பதாக படக்குழு தெரிவித்தது. மேலும் நடிகர் வெற்றி தனது டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். ஆகையால் படத்தின் ஒட்டுமொத்த டப்பிங் பணிகளும் நிறைவடைந்திருக்கிறது. தயாரிப்புப் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. படத்தின் டீசரை பிரபல இயக்குனர் வெளியிடப்யிருப்பதாக இன்று அறிவித்துள்ளனர்.