11 வருட திருமணத்திற்குப் பிறகு, ஜி.வி.பிரகாஷ் க்கும் பாடகி சைந்தவிக்கும் இடையேயான எதிர்பாராத விவாகரத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்நிலையில் ரசிகர்கள் இருவரும் ஜோடியாக பங்கேற்ற பழைய நேர்காணல் காட்சிகளை கட் எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டு வைரலாகி வருகின்றனர். அதன்படி, சமீபத்தில் ஜிவி பிரகாஷ் பிரேக் அப் ஏன் ஆகிறது என்பது குறித்து தெளிவாக பேசும் வீடியோ ஒன்றை கட் எடிட் செய்து இணையத்தில் ரசிகர் ஒருவர் வெளியிட அது தற்போது வைரலாகியுள்ளது.

அதில் பொதுவாக பிரேக் அப் ஏன் ஆகிறது என்றால், சம்பந்தப்பட்ட இரு நபர்கள் தங்களுக்குள் நடக்கும் சண்டையை தாங்களே பேசி முடித்துக்கொள்ளாமல் அதை மற்றொரு நபரிடம் கொண்டு சேர்த்து அதை பெரிதாக்குவது தான் காரணமாக இருக்கிறது. இதில் பிரச்சனை முடிவடைவதில்லை. மாறாக தங்கள் மீது இருக்கும் தவறை எதிரே இருப்பவர் மீது திணிப்பதன் மூலம் வராத பிரச்சனை கூட வந்து அது இறுதியில் பிரேக்கப் ஆக மாறுகிறது என தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.