இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது 148 ரூபாய், 398 ரூபாய், 1198 ரூபாய் மற்றும் 4498 ரூபாய் விலையில் 4 புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதை 1198 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் ஓடிடி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் அன்லிமிடெட் போன் கால், தினசரி 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் கூடுதலாக 18 ஜிபி இலவச டேட்டா மற்றும் 14 ஓடிடி இயங்கு தலங்களுக்கான சந்தா ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்த 14 ஓடிடி சந்தா சலுகையில் ஜியோ டிவி ப்ரீமியம் உட்பட ஜியோ சினிமா பிரீமியம், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்,  Zee5, SonyLIV, Prime Video (Mobile), Lionsgate Play, Discovery+, Docubay, Hoichoi, Sun NXT, Planet Marathi, Chaupal, EpicON மற்றும் Kanchcha Lanka ஆகிய சந்தாக்களும் கிடைக்கும். இந்த சந்தாவின் கால அளவு 84 நாட்களாகும்.