ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஏராளமான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தற்போது ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு அன்லிமிடெட் பலன்களை ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி 1199 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக முதலில் அதிவேக 2ஜிபி டேட்டா அதன் பிறகு அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடட் கால்கள் மற்றும் 14 ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களும் வழங்கப்படுகின்றன. இதனால் 24 மணி நேரமும் பொழுதுபோக்கு நிகழ்வுகளை கண்டு பயனர்கள் மகிழலாம் என தெரிவித்துள்ளது.