ஜியோமி நிறுவனம்…. 3 ஸ்மார்ட் போன்கள் வெளியீடு….!!!!

தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போனுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள். இதனால் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களும் பல்வேறு ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் முன்னணி நிறுவனமான ஜியோமி 12 சீரிஸில் 3 ஸ்மார்ட் போன்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஜியோமி 12,12 ப்ரோ மற்றும் 12X என 3 மாடல்கள் தற்போது அறிமுகமாகியிருக்கிறது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 Gen1 CPU 12 GB ரேம் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்ட் 12 0S, 4500 mAh பேட்டரி, ரியர் சைடில் 3 கேமரா, 32 மெகா பிக்சல் செல்பி கேமரா மாதிரியான இதில் இருக்கிறது. மேலும் ஜியோமி 12 ப்ரோவில் 5000 mAh பேட்டரி மற்றும் 6.73 இன்ச் டிஸ்ப்ளே இதில் இடம்பெற்றுள்ளது.

மற்றபடி ரேம் இன்டர்னல் ஸ்டோரேஜ், ப்ராஸசர், ஆண்ட்ராய்ட் இயங்குதளம் மாதிரியானவை ஜியோமி 12 போலவே உள்ளது. ஜியோமி 12X போனை பொறுத்தவரையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உள்ளது. அது மட்டும் தான் முதல் 2 போன்களில் இருந்து இந்த மாடலை தனித்துக் காட்டுகிறது. 12 மாடல் போன் போல 6.28 டிஸ்ப்ளே கொண்டுள்ளது இந்த போன். ஜியோமி 12 37529 ரூபாயும், 12X 43395 ரூபாயும், 12 ப்ரோ 55126 விலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *