தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி 300 கோடி வரை வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, யோகி பாபு மற்றும் நடிகர் ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நலையில் தற்போது ஜிமிக்கி பொண்ணு பாடலின் வீடியோவை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.